என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சொகுசு விடுதி"
- 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.600 கோடி மதிப்புள்ள நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாக ஜார்க்கண்ட் முதல்-மந்திரியும் ஜே.எம்.எம். கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது.
இதனை தொடர்ந்து தனது முதல் மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்தார். புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார். அவர் 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் தடுக்க ஜே.எம்.எம். கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஐதராபாத் அழைத்துவரப்பட்டனர் அவர்கள் அங்குள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டில் இருந்து மொத்தம் 43 எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர். 4 எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு பராமரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் எம்.எல்.ஏ.க்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து வருகிறார். வருகிற 5-ந் தேதி வரை ஜார்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
5-ந் தேதி தனி விமான மூலம் அவர்களை ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இன்று ஜார்கண்ட் மாநில எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.எல்.ஏ.க்கள் தங்கி உள்ள சொகுசு விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
- ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும்
தெலுங்கானா மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது.
இதையடுத்து வருகின்ற 3-ந் தேதி தேர்தல் முடிவுகள் வர உள்ளன. நேற்று மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இதில் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறியுள்ளன.
காங்கிரஸ் கட்சி 60 முதல் 79 இடங்கள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளது. சந்திரசேகர ராவ் கட்சி 40 முதல் 56 இடங்களை பிடிக்கவும் வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கே உள்ள 119 இடங்களில் 60 இடங்களில் மெஜாரிட்டி பெற வெற்றி பெற வேண்டும்.
தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமையும் பட்சத்தில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ.க்களை சொகுசு விடுதி ஒன்றில் வைத்து பாதுகாக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
பெங்களூருவில் நவீன வசதிகள் கொண்ட சொகுசு விடுதியை தயார் செய்து வைத்துள்ளதாம்.
தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், தெலுங்கானா பகுதியில் இருந்து வெற்றி பெறும் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சந்திர சேகர ராவ் கட்சிக்கு தாவுவதை தடுக்கவும், குதிரை பேரத்துக்கான முயற்சிகளையும் முறியடிக்கவும் காங்கிரஸ் இத்தகைய ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு எம்.எல்.ஏ.க்களை இடமாற்றம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்